search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயன்
    X
    சுசீந்திரம் தாணுமாலயன்

    பிறைக் கவசத்துடன் காட்சி அளிக்கும் தாணுமாலயன்

    இறைவன் மீது கொண்ட பக்தியால் தினம் தோறும் அவரை வழிபட்டு வருவோமானால் முடிவில் மெய்ஞானமாகிய பூரண ஒளியில் இறைவனை காண முடியும்.
    தாணுமாலய சுவாமி கோவில் கருவறையில் லிங்க வடிவமுள்ள பெருமானின் மீது சார்த்தப்படும் தங்க கவசத்தில் சுவாமியின் உருவமும், ஒன்றின் மேல் ஒன்றாக பதினான்கு சந்திரப்பிறைகளும் அதன் மீது ஆதி சேஷனாகிய பாம்பு காட்சி அளிக்கிறது.

    பதினான்கு நாட்களில் வருகின்ற சந்திரனின் பிறைகள் உச்சியில் சிறியதிலிருந்து தொடங்கி கீழ்பாகம் பெரிதாகி முடிவில் பவுர்ணமி போன்று இறைவனின் முகம் தெரிவதாக சந்திரனின் வளர்ச்சியை நமக்கு காட்டுகின்றது. 14 நாட்கள் கழித்து அமாவாசையான இருளை காண்கிறோம்.

    இறைவன் மீது கொண்ட பக்தியால் தினம் தோறும் அவரை வழிபட்டு வருவோமானால் முடிவில் மெய்ஞானமாகிய பூரண ஒளியில் இறைவனை காண முடியும். அவரை விட்டு விலக, விலக பக்தியென்ற பேரன்பு குறையும் தருணத்தில் மாயை என்ற இருளில் மூழ்குகின்றோம் என்ற உயர்ந்த தத்துவத்தையும் நமக்கு உணர்த்துகின்றது பிறைகள் நிறைந்த கவசக்காட்சி. இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் முகத்தோற்றம் சிவசொரூபமாகவே உள்ளது.

    கருவறை திருநடையில் இருந்து இறைவனை நேராக நாம் காணும்போது வலதுபுறம் சற்று தள்ளி இருப்பதை காண முடிகிறது. ரூபாரூபமாய் விளங்கும் சிவலிங்கத்தின் அருகே இடதுபுறம் சிறிது இடைவெளியிருக்கும் இடத்தில் அரூபமான சக்திக்கு இடமளித்து சக்தியில்லையேல், சிவமில்லை என்ற தத்துவப்படி லிங்க வடிவில் மும்மூர்த்திகளையும் செயல்பட வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார் தாணுமாலய பெருமான். சாமிக்கு மேல் உள்ள 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக உள்ளது.
    Next Story
    ×