என் மலர்

  வழிபாடு

  அகத்தியருக்கு குருபூஜை
  X
  அகத்தியருக்கு குருபூஜை

  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு குருபூஜை விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்திய முனிவர் குமரப்பர், ஆதிலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பலவிதமான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி அகத்திய முனிவருக்கு குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

  தொடர்ந்து காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் அகத்திய முனிவர் குமரப்பர், ஆதிலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பலவிதமான மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

  நேற்று மாலை அகத்திய முனிவர் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், அருட்சித்தர் அகத்தியர் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×