search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி மலைக்கோவில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம்
    X
    பழனி மலைக்கோவில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம்

    பழனி மலைக்கோவில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம்

    மூலவர் சன்னதியில் முருகப்பெருமானிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.
    பழனி முருகன் கோவிலில், அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். மேலும் பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இவர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கான அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம், பூஜை நடத்தப்பட்டது.

    முன்னதாக காலை 7 மணிக்கு மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் விநாயகர் பூஜை, 9 கலசங்கள் வைத்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, பாராயணம் ஆகியவை நடந்தது. மேலும் கணபதி ஹோமம், 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, கலச அபிஷேகம், 16 வகை தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆனந்த விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் சன்னதியில் முருகப்பெருமானிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி, தீபாராதனை நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர்கள் ராசு, வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 26-ந்தேதி அழகு நாச்சியம்மன் கோவிலிலும், 27-ந்தேதி வனதுர்க்கையம்மன் கோவிலிலும், 28-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலிலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும், யாகமும், நடைபெறுகிறது. தொடர்ந்து 30-ந்தேதி பாதவிநாயகர் கோவில், கன்னிமார், கருப்பணசுவாமி கோவில், பைரவி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பலிபூஜை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×