search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
    X
    குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

    குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சுமார் 15 அடி உயரத்தில் ஸ்ரீபஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 20-ந் தேதி விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, கோபுர கலச பிரதிஷ்டை நடந்தது.

    நேற்று காலை யாக சாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடும், காலை 10 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா மற்றும் 10.30 மணிக்கு மேல் ஸ்ரீபஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவை கணக்கம்பாளையம் பிரபு சிவம், ஆலய அர்ச்சகர் சந்தோஷ் சிவம் மற்றும் அவர்களின் குழுவினர்கள் நடத்தினர். கோவில் வளாகத்தில் கூடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×