என் மலர்

  வழிபாடு

  திற்பரப்பு மகாதேவர் கோவிலில் லட்ச தீப வழிபாடு
  X
  திற்பரப்பு மகாதேவர் கோவிலில் லட்ச தீப வழிபாடு

  திற்பரப்பு மகாதேவர் கோவிலில் லட்ச தீப வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திற்பரப்பு மகாதேவ கோவில் சுற்றுப்புறங்களில் உள்ள விளக்கணி மாடத்தில் ஒளியேற்றும் லட்ச தீப வழிபாடு நடந்தது. லட்ச தீபம் ஏற்றப்பட்டபோது கோவில் விளக்கொளியில் ஜொலித்தது.
  திற்பரப்பு அருவி அருகில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் 12 சிவாலய ஓட்ட கோவில்களில் 3-வது கோவில் ஆகும். இங்கு மார்கழி திருவாதிரை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அபிஷேகம், களபாபிஷேகம், தீபாராதனை, ராமாயண பாராயணம், அன்னதானம் போன்றவை நடந்தன.

  மாலையில் கோவில் சுற்றுப்புறங்களில் உள்ள விளக்கணி மாடத்தில் ஒளியேற்றும் லட்ச தீப வழிபாடு நடந்தது. லட்ச தீபம் ஏற்றப்பட்டபோது கோவில் விளக்கொளியில் ஜொலித்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×