என் மலர்

  வழிபாடு

  செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
  X
  செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

  செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
  நெல்லை அருகே ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த செப்பறை அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

  பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். காலை 11.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இயற்கை எழில் சூழ்ந்த ரதவீதியில் தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு நடராஜர் திருநடன காட்சியும், அழகிய கூத்தர் வீதி உலாவும் நடைபெறுகிறது. மாலையில் பஞ்சமுக அர்ச்சனை நடக்கிறது.
  Next Story
  ×