என் மலர்

  வழிபாடு

  கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
  X
  கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

  கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மார்கழி மாத பிறப்பு, கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் காலை சாமிக்கு பால், தயிர், இளநீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சாமி வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், நன்செய் இடையாறு மாரியம்மன், அலகு நாச்சியப்பன், திருவேலீஸ்வரர், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், புது மாரியம்மன், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி, காசி விஸ்வநாதர், பழைய காசி விஸ்வநாதர், கபிலர்மலை பாலதண்டாயுதபாணி, விஜயகிரி பழனி ஆண்டவர் மற்றும் அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

  நல்லூர் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் அருணகிரிநாதர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமகிரிப்பேட்டை மாரியம்மன், பெருமாள், புதுப்பட்டி சூடாமணி அம்மன், காமாட்சி அம்மன், சீராப்பள்ளி ஈஸ்வரன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடந்தது.

  இதேபோல் நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×