search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ரூ.13 லட்சத்தில் உருவாக்கப்பட்ட தளத்தில் தேர்கள் நிறுத்தம்
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ரூ.13 லட்சத்தில் உருவாக்கப்பட்ட தளத்தில் தேர்கள் நிறுத்தம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ரூ.13 லட்சத்தில் உருவாக்கப்பட்ட தளத்தில் தேர்கள் நிறுத்தம்

    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
    பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக கோவிலில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் என நான்கு தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் கோவில் அருகில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் சுசீந்திரம் கோவிலுக்கு வருகை தந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மழை காலங்களில் தேர்களின் சக்கரங்கள் நனைந்து துரு பிடிப்பதை தடுக்கும் வகையில் தேர் தளத்தை உயர்த்தி பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கோவில் நிதியில் இருந்து ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தேர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தளத்தில் நிறுத்தப்பட்டன.
    Next Story
    ×