என் மலர்

  வழிபாடு

  கருங்கல்பாளையம் மாரியம்மன்
  X
  கருங்கல்பாளையம் மாரியம்மன்

  கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவிலில் இன்று (புதன்கிழமை) கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

  ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

  இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது. 25-ந்தேதி இரவு 2 கோவில்கள் முன்பும் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றினர். கடந்த 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து தேரோட்டமும் நடந்தது. நேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
  Next Story
  ×