என் மலர்

  வழிபாடு

  பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
  X
  பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

  பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி நேற்று நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. அதன்படி நாமக்கல் அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

  பின்னர் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் நந்திக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பிரதோஷத்தையொட்டி நாமக்கல் தட்டார தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில், வள்ளிபுரம் வேதநாராயண கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
  Next Story
  ×