என் மலர்

  வழிபாடு

  விசுவரூப ஆஞ்சநேயர் கோவிலில் 504 துளசி வழிபாடு
  X
  விசுவரூப ஆஞ்சநேயர் கோவிலில் 504 துளசி வழிபாடு

  தூத்துக்குடி அருகே விசுவரூப ஆஞ்சநேயர் கோவிலில் 504 துளசி வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துளசியின் மகத்துவம், துளசி பூஜை குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், துளசி மாதாவின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டியும் 504 துளசி வழிபாடு செய்யப்பட்டது.
  துளசியை வளர்த்தாலும், தொட்டாலும், பார்த்தாலும், பயிராக்கினாலும் பாவம் எல்லாம் போய்விடும் என்று பத்மபுராணம் கூறுகிறது. அந்த வகையில் துளசியின் மகத்துவம், துளசி பூஜை குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், துளசி மாதாவின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டியும் 504 துளசி வழிபாடு தெய்வச்செயல்புரம் விசுவரூப ஆஞ்சநேயர் கோவிலில் ஜெயமங்கள ஆஞ்சநேயர் பஜனைக்குழு, பிருந்தா சேவா டிரஸ்ட் சார்பில் நடத்தப்பட்டது.

  அப்போது, துளசி செடிகள் தொட்டியில் வைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. அந்த துளசி செடியின் மகிமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜையில் தூத்துக்குடி, வசவப்பபுரம், தெய்வசெயல்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பூஜை செய்த துளசி தொட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனை பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர். பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×