என் மலர்

  வழிபாடு

  பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை
  X
  பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை

  பல்லடம் கருப்பராயன் கோவிலில் 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாள் பிரதிஷ்டை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி பழனி கவுண்டம்பாளையத்தில் கருப்பராயன் கோவில் முன்புறம் வைப்பதற்காக சுமார் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி பழனி கவுண்டம்பாளையத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில் முன்புறம் வைப்பதற்காக சுமார் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரிவாள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

  இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், கருப்பராய சாமியின் ஆயுதமான அரிவாளை கோவில் முன்பு பிரதிஷ்டை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் பிரம்மாண்டமான அரிவாள் செய்து வைக்க வேண்டுமென பக்தர்கள் கூறியதால் 2000 கிலோ எடையில் 32 அடி உயர அரிவாள் செய்யப்பட்டது. அதனை கோவில் முன்பு கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றார். 32 அடி உயர பிரம்மாண்ட அரிவாளை பக்தர்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

  Next Story
  ×