என் மலர்

  வழிபாடு

  அய்யா வைகுண்டர்
  X
  அய்யா வைகுண்டர்

  உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் கார்த்திகை திரு ஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
  நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 17 நாட்கள் நடைபெறுகிறது.

  நாளை காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு பணிவிடையும், உச்சிப்படிப்பு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு பணிவிடையும், திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு இனிமம் வழங்குதலும் நடைபெறுகிறது.

  விழா நாட்களான 16-ந் தேதி வரை தினமும் பணிவிடை, உச்சிப்படிப்பு, திருஏடு வாசிப்பு, இனிமம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  திருஏடு வாசிப்பின் 15-ம் நாளான 17-ந் தேதி அன்று மாலை 6 மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து திருக் கல்யாண வைபோக நிகழ்ச்சியும், திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும் நடைபெறுகிறது.

  திருஏடு வாசிப்பின் நிறைவு நாளான 19-ந் தேதி அன்று பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு பணிவிடை மற்றும் உகப்படிப்பும், மாலை 4 மணிக்கு அய்யாவின் வாகன பவனி நிகழ்ச்சியும், 6 மணிக்கு அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடை, பட்டாபிஷேக நிகழ்ச்சி மற்றும் திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. இரவு 1 மணிக்கு திருஏடு வாசிப்பு நிறைவு செய்யப்படுகிறது.

  திருஏடு வாசிப்பின் அனைத்து நாட்களிலும் காற்றாடித் தட்டை சேர்ந்த ராஜா, மேல உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன், உடையப்பன் குடியை சேர்ந்த நாராயணமணி ஆகியோர் திருஏடு வாசிக்கிறார்கள். இதற்கான அகிலத்திரட்டு பாராயண பேரூரையை புதூரை சேர்ந்த நாஞ்சில் அசோகன் கூறுகிறார்.

  விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் என். பிச்சைப்பழம் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
  Next Story
  ×