search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமலை வராகசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்
    X
    திருமலை வராகசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

    திருமலை வராகசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்

    திருமலையில் உள்ள வராகசாமி கோவில் இரவு உற்சவர் வராகசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.
    திருமலையில் உள்ள வராகசாமி கோவில் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி முடிந்து மகா கும்பிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி நேற்று வராகசாமி கோவிலில் பூர்ணாஹுதி, பிரபந்த சாத்துமுறை, வேதபாராயண சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தனுர் லக்னத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை உற்சவர் வராகசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார்.

    மகா கும்பாபிஷேகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×