search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நேற்று இரவு சிங்காரவேலர் (முருகப்பெருமான்) வேல் வாங்கும் உற்சவம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    நேற்று இரவு சிங்காரவேலர் (முருகப்பெருமான்) வேல் வாங்கும் உற்சவம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    சிக்கல் சிங்கார வேலர் கோவில் தேரோட்டம் எளிமையாக நடந்தது

    சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். சிங்காரவேலர் கோவிலில் உள்ள வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு காலை 7.10 மணிக்கு வெள்ளி தேரில் சிங்காரவேலர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது.

    முன்னதாக சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் படி தேரோட்ட நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது.
    Next Story
    ×