என் மலர்

  ஆன்மிகம்

  சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவகங்கை குளம் அருகே சிவகாமி சுந்தரி அ
  X
  சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவகங்கை குளம் அருகே சிவகாமி சுந்தரி அ

  சிதம்பரத்தில் சிவகாமி சுந்தரி அம்மன் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிதம்பரத்தில் சிவகாமி சுந்தரி அம்மனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவகங்கை குளம் அருகே சிவகாமி சுந்தரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஐப்பசி மாத பூரம் விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது

  இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிவகாமிசுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேருக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழவீதியில் இருந்து நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.

  தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டு வாங்கும் உற்சவமும், நாளை(திங்கட்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×