search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X
    ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    ராசிபுரத்தில் உள்ள பிரத்தி பெற்ற நித்யசுமங்கலி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ராசிபுரத்தில் உள்ள பிரத்தி பெற்ற நித்யசுமங்கலி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி கோபுரங்கள், கோபுர சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டன. இதையடுத்து கிராமசாந்தியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து ஹோம பூஜைகள், யாகசாலை பூஜைகள், வேள்விகள், வாஸ்து சாந்தி நடத்தப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை நடந்தன. யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    மேளதாள ஊர்வலத்துடன் புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து கோபுரங்களுக்கு கொண்டு சென்றனர். மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பயபக்தியுடன் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பின் அம்மனுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா லோகரஞ்சன், முன்னாள் எம்.பி. பி.ஆர். சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராமசாமி, ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் சங்கர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கல்யாணி ரங்கசாமி, முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, தாசில்தார் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பரமத்தி வேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜரணவீரன், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×