search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோட்டப்பணிக்கன் தேரிவிளை முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
    X
    சோட்டப்பணிக்கன் தேரிவிளை முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

    சோட்டப்பணிக்கன் தேரிவிளை முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

    தேரிவிளை முத்தாரம்மன் கோவிலில் அம்மனுக்கு பூஜை, கொலுவுக்கு பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிறைவு நாள் விழா 14-ந்தேதி நடைபெறுகிறது.
    தென்தாமரைகுளம் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளை தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் மாலை நடை திறப்பு, இரவு நவராத்திரி கொலு வைத்தல், அம்மன் மற்றும் கொலுவுக்கு பூஜை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.

    5-ம் நாளான்று இரவு 7 மணிக்கு 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. சுமங்கலி பூஜைக்கு கரும்பாட்டூர் ஊராட்சி தலைவி தங்கமலர் சிவபெருமான் தலைமை தாங்கினார். தொடர்ந்து அம்மனுக்கு பூஜை, கொலுவுக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. நிறைவு நாள் விழா 14-ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று காலை 9 மணிக்கு விளையாட்டு போட்டிகள், மாலை 4 மணிக்கு இளைஞர்களுக்கான கபடி போட்டியும், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அம்மன் மற்றும் கொலு பூஜை, பிரசாதம் வழங்குதல், இரவு 9 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சோட்டப்பணிக்கன் தேரிவிளை ஊர் தலைவர் சிவபெருமான் பரிசு வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை நவராத்திரி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×