search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தர்ப்பணம்
    X
    தர்ப்பணம்

    மகாளய அமாவாசையையொட்டி 2 நாட்கள் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

    மகாளய அமாவாசையையொட்டி நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை வதிக்கப்பட்டுள்ளது.
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் படி கோவில்களில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மகாளய அமாவாசை வருகிறது. அன்று நாகை, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் மக்கள் கூடுவார்கள். பின்னர் கோவில்களில் சாமி தரிசனம் செய்யவார்கள். இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகி, அதன் காரணமாக, கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

    அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், கோடியக்காடு, அமிர்தகடேஸ்வரர் கோவில் மற்றும் ஏரிவித்யேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் அர்ச்சகர் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் ஆகம விதிகளின்படி, பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்திட அனுமதிக்கப்படுவர். மேலும, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் மேலே குறிப்பிட்டுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி இல்லை.

    அதேபோல 2 நாட்கள் மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சென்று நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×