search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரசக்குழி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X
    அரசக்குழி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    அரசக்குழி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    அரசக்குழி முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிழக்கு தெருவில் செல்வகணபதி, பாலமுருகன், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி மற்றும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் 14-ந் தேதி அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், கலா கர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாகசாலை பூஜைகள், மூலமந்திர ஹோமம், கோபுர பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7.30 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜைகள், மூலமந்திர ஹோமமும், 8.30 மணிக்கு நாடி சந்தானமும் நடைபெற்றது.

    தொடர்ந்து மேல, தாளம் முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் 10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் 10.15 மணிக்கு மூலவர் முத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×