search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாடுதுறையில் சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமி 58-வது ஆண்டு குரு பூஜை விழா
    X
    மயிலாடுதுறையில் சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமி 58-வது ஆண்டு குரு பூஜை விழா

    மயிலாடுதுறையில் சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமி 58-வது ஆண்டு குரு பூஜை விழா

    மயிலாடுதுறை சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமி 58-வது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு சித்தர் சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்ட கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    மயிலாடுதுறையில் சற்குரு ஓம்ஸ்ரீ சித்தர் சுவாமிகள் வாழ்ந்து மறைந்தார். அவரது குருபூஜை விழா புதுச்சேரி ஓங்கார ஆசிரமம் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்று 58-வது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை மாப்படுகை சாலையில் மயானத்தில் உள்ள சித்தர் சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்ட கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சர்வ ஜீவப்ரீதி பூஜை, பஜனை, தியானம், அமுது படையலுடன் மகாதீபாராதனை நடந்தது. ஓங்கார ஆசிரமம் தலைமை பீடாதிபதி ஓங்காரநந்தா சுவாமிகள், சித்தர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் சற்குரு சித்தர் சுவாமிகள் மகிகை பற்றி சிறப்பு அருளுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அரசு வக்கீல் முருகு மாணிக்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம், ஏ.வி.சி. கல்லூரி முதல்வர் நாகராஜன், பா.ஜ.க. மாவட்ட வர்த்தக அணி தலைவர் முத்துக்குமாரசாமி, சற்குரு சித்தர் சுவாமிகள் அதி்ஷ்டான தலைவர் குமார் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அப்போது ஓங்காரநந்தா சுவாமிகள் பேசுகையில், இந்தியா முழுவதும் உள்ள மயானங்கள் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோடீஸ்வரானந்தா சுவாமிகள் நன்றி கூறினார்.
    Next Story
    ×