search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X
    கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    கோவில்பட்டி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கோவில்பட்டியில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. மாலையில் முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் தினமும் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

    24-ந் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜை நடந்தது.

    25-ந் தேதி காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

    நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, ஆறாம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக் ஷாபந்தனம், நாடி சந்தானம், திரவியா ஹுதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல், காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் பத்திர காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 11 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் திருசிற்றம்பல ஞானபிரகாச தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் பராசக்தி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

    தூத்துக்குடி ஸ்ரீ ஆலால சுந்தர வேதசிவாகம வித்யாலயம் ஆர்.செல்வம் பட்டர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினா். கோவில்பட்டி டி.பி.ஆர்.குழுவினர் நாதசுரம் இசைத்தனர்.

    யாகசாலையை பஞ்சநாதன் ஸ்தபதி, திருக்கோவில் மண்டபத்தை வேலாயுதம் ஸ்தபதி ஆகியோர் அமைத்து இருந்தனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மண்டல பூஜை தொடங்கும்.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம், செயலாளர் எம்.பி.சி.மாணிக்கம், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.டி.சி.ராஜதுரை, எஸ்.எஸ்.டி.கே.கணேஷ்பாபு, என்ஜினீயர் கே.ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை சங்க துணை தலைவர் எம். செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர். ஜெயபாலன், தொழில் அதிபர்கள் என். ராஜவேல், கூடலிங்கம் ஆறுமுகசாமி, எ. சுதாகர், எ. செந்தில் குமார், கடலை மிட்டாய் உற்பத்தி மார்கள் மற்றும் விற்பனை யாளர்கள் சங்க தலைவர் எ. கார்த்தீபன் வரன், பொது நல மருத்துவ மனை பொருளாளர் பாஸ்கர் எஸ்.எஸ்.டி எம்.கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன், நாடார் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் செந்தில் கனிராஜா, நாடார் நடுநிலைப் பள்ளி செயலாளர் கண்ணன், வக்கீல்கள் எ. செல்வம், டி. ஸ்ரீதரன், ரத்தின ராஜா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×