என் மலர்

  ஆன்மிகம்

  6 அடி நீள அரிவாள் மீது ஏறி ஊர்வலமாக வந்த சாமியாடி
  X
  6 அடி நீள அரிவாள் மீது ஏறி ஊர்வலமாக வந்த சாமியாடி

  மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடித்திருவிழா: 6 அடி நீள அரிவாள் மீது ஏறி ஊர்வலமாக வந்த சாமியாடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து மழுவேந்தி கருப்பரை அழைத்து வந்தனர்.
  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கீழத்தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த ஆண்டு கொரானா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு கொரானா பரவல் குறைந்த நிலையில் மழுவேந்தி கருப்பர் கோவில் ஆடி அருவா திருவிழா நடைபெற்றது.

  இதையொட்டி கிருங்காக்கோட்டை, பிள்ளையார்பட்டி, வேங்கைப்பட்டி, பிள்ளையார்நத்தம், பிரான்மலை பகுதி மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேலப்பட்டி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து மழுவேந்தி கருப்பரை அழைத்து வந்தனர். பின்னர் 6 அடி நீளமுள்ள 2 அரிவாள்கள் மீது ஏறி சாமியாடிய படி 8 கி.மீ. தூரம் ஊர்வலமாக சிங்கம்புணரி நாவிதர் ஊரணி வந்தடைந்தனர்.

  அங்கிருந்து கரகம் எடுத்து சிங்கம்புணரி-காரைக்குடி சாலை பெரிய கடை வீதி பகுதி வழியாக கீழத் தெருவில் உள்ள மழுவேந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 10 மணிக்கு கிடா வெட்டி வழிபாடு நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×