என் மலர்

  ஆன்மிகம்

  ராஜகாளியம்மன்
  X
  ராஜகாளியம்மன்

  ராஜகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ராஜகாளி அம்மனுக்கும், மரத்தடி காளியம்மனுக்கும் பால், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
  திருப்பத்தூரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா, பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு ராமர் மடத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து செட்டிய தெரு, காளியம்மன் கோவில் தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

  10 மணி அளவில் ராஜகாளி அம்மனுக்கும், மரத்தடி காளியம்மனுக்கும் பால், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நண்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார மாக வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  தொடர்ந்தது மாலை 4 மணிக்கு செட்டிய தெரு, வாணியன் கோவில்தெரு, புதுத்தெரு, காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து பெண்கள் பூத்தட்டு ஊர்வலம் சுமந்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பத்தூர் செட்டியதெரு இளைஞர் குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
  Next Story
  ×