என் மலர்

  ஆன்மிகம்

  ஆனந்தவல்லி அம்மன்
  X
  ஆனந்தவல்லி அம்மன்

  வாய்மேடு அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை மாவட்டம் வாய்மேட்டில் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், இளநீர், தயிர், நெய், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
  நாகை மாவட்டம் வாய்மேட்டில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவையொட்டி கோவிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு பால், இளநீர், தயிர், நெய், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து ஆனந்தவல்லி அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

  இதேபோல திருக்குவளை அருகே காருகுடியில் மகாமாரியம்மன் மற்றும் நாக அம்மன் கோவிலில் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு எண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×