search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மா அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்
    X
    அம்மா அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்

    அம்மா அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் எதிரே அம்மா அகிலாண் டேஸ்வரி சித்தர் பீடத்தில் மகா யாகம் நடத்தது. சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தபடி, குறைவான பக்தர்கள் மட்டும் யாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
    கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் எதிரே அம்மா அகிலாண் டேஸ்வரி சித்தர் பீடம் உள்ளது. இங்கு, உலக மக்கள் கொரோனா வைரஸ் நோயில் இருந்து விடுபட, ஆடி அமாவாசை நாளில் பரமானந்த பாபாஜி சுவாமிகள் மகா யாகம் நடத்தினார். காலை 9.30 மணிக்கு தொடங்கிய மகா யாகம் 11 மணி வரை நடைபெற்றது. சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தபடி, குறைவான பக்தர்கள் மட்டும் யாகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து பரமானந்த பாபாஜி சுவாமிகள் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்கள் கொரோனா நோயால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தொழில்கள் அழிந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி எங்களது பீடத்தில் மகா யாகம் நடத்தி உள்ளோம்.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற கடுமையான முயற்சி எடுத்து வருகிறார். அதைக் காணும்போது நாம் தமிழக அரசை பாராட்டாமல் இருக்க முடியாது. எனவே மக்கள் ஒவ்வொருவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.அப்போது தான் ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×