search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை
    X
    சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை

    சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை

    சித்தர் முத்துவடுகநாதர் ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனதால் அன்றைய தினம் குருபூஜை கொண்டாடுவது வழக்கம்.

    சிங்கம்புணரி பேரூராட்சியில் வேங்கைப்பட்டி சாலையில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வணிகர்கள் நல சங்கம் சார்பில் ஆடிப்பெருக்கு அன்று மகா அன்னதான விழா நடத்தப்படுவது வழக்கம். சித்தர் முத்துவடுகநாதர் ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனதால் அன்றைய தினம் குருபூஜை கொண்டாடுவது வழக்கம்.

    இந்த ஆடிப்பெருக்கு ரோகிணி நட்சத்திரத்துடன் வந்ததால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது போல 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் வரும் அரிய நிகழ்வு. இதனால் நேற்று தங்க கவசத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருக்கோஷ்டியூரில் உள்ள முத்தையா சுவாமி கோவிலிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×