search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது
    X
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆடிப்பெருக்கான நாளை(செவ்வாய்க்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்லாமல் இருப்பதற்காக மந்தைவெளி, பெரிய தெரு, கொடுக்கன்குப்பம் சாலை ஆகிய பகுதியில் போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தனர்.

    மேலும், செஞ்சி போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கோவிலுக்கு வந்த பக்தர்களை திரும்பி அனுப்பி வைத்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் மயிலம் முருகன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து சென்றனர்.
    Next Story
    ×