search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா பக்தர்கள் இ்ன்றி நடந்தது
    X
    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா பக்தர்கள் இ்ன்றி நடந்தது

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா பக்தர்கள் இ்ன்றி நடந்தது

    ஐயாறப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கொடியேத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
    திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா நேற்று கொடியேத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து கொடிமரத்துக்கு சந்தனம் பால், தேன், மஞ்சள் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா விதிமுறை காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

    11-ந்தேதி இரவு பிராயசித்தாபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×