search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலங்குடி நாடியம்மனுக்கு முளைப்பாரி
    X
    ஆலங்குடி நாடியம்மனுக்கு முளைப்பாரி

    ஆலங்குடி நாடியம்மனுக்கு முளைப்பாரி

    வளர்ந்த முளைப்பாரியை நேற்று கிராம பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கும்மியடித்து அம்மன்பாட்டுப்பாடி செவ்வாய் மிராசுதார்கள் வழிகாட்ட அந்த ஊரில் உள்ள நீர்நிலைகளில் முளைப்பாரியைக் கொட்டினார்கள்.
    ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இங்கு முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாடியம்மனுக்கு காப்புக்கட்டி கோவிலுக்கு உரிமை உள்ள 6 கிராமமக்கள் முளைப்பாரி எடுத்து அந்தந்த ஊரில் உள்ள நீர் நிலைகளில் அம்மனை வேண்டி கொட்டுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் ஆடி முதல் செவ்வாய் அன்று காப்புக் கட்டப்பட்டது. கோவில் தக்கார் மற்றும் ஆறு கிராமமுக்கியஸ்தர்கள் அறிவிப்பின்படி முளைப்பாரி தயார் செய்யப்பட்டது. முனைப்பாரி தயார் செய்த நாளிருந்து அம்மனை வேண்டி பெண்கள் நாள் தோறும் இரவில் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.

    வளர்ந்த முளைப்பாரியை நேற்று கிராம பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கும்மியடித்து அம்மன்பாட்டுப்பாடி செவ்வாய் மிராசுதார்கள் வழிகாட்ட அந்த ஊரில் உள்ள நீர்நிலைகளில் முளைப்பாரியைக் கொட்டினார்கள். ஆலங்குடி நாட்டின் தாய்க் கிராமமான பள்ளத்தி விடுதியில் முளைப்பாரி எடுப்பு நடைபெற்றது. பெண்கள் கும்மியடித்து பாட்டுப்பாடி முளைப்பாரியை தலையில் சுமந்து ஊருக்குத் தென் புறம் உள்ள மயிலி ஊரணிக்கு கொண்டு சென்றனர்.
    அங்கு முனைப்பாரியை ஊரணி தண்ணீரில் கரைத்தனர். பூசாரி முளைப்பாரி பயிர் மற்றும் விபூதியை அனைவருக்கும் பிரசாதமாக கொடுத்து இந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என அருள்வாக்கு கூறினார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×