search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன்
    X
    மாரியம்மன்

    சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, விழாக்கான கொடியேற்றப்பட்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தீ மிதி திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் குறிப்பிட்ட நேரங்களில மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்தானிகர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×