search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று 2-ம் கட்ட உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று 2-ம் கட்ட உண்டியல் எண்ணும் பணி நடந்தபோது எடுத்தபடம்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2-ம் கட்ட உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், 2-ம் கட்ட உண்டியல் எண்ணும் பணி நேற்று தொடங்கியது. 3-ம் கட்ட உண்டியல் எண்ணும் பணி வருகிற 22-ந் தேதி தொடங்கும் என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
    காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திப்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது.

    கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த காரணத்தினால், உண்டியல் எண்ணும் பணி, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    தற்போது கொரோனா தொற்று குறைந்து, கோவிலுக்கு பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் முதல் கட்டமாக கடந்த 15-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது காணிக்கையாக கிடைத்த ரூ.32 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    2-ம் கட்டமாக நேற்று மீண்டும் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 3-ம் கட்ட உண்டியல் எண்ணும் பணி வருகிற 22-ந் தேதி தொடங்கும் என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×