search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    லால்குடி அருகே சாமவேதீஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம்
    X
    லால்குடி அருகே சாமவேதீஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம்

    லால்குடி அருகே சாமவேதீஸ்வரர் கோவிலில் பாசுபதாஸ்திர ஜெப ஹோமம்

    லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் அமைந்துள்ள லோகநாயகி சமேத ஸ்ரீசாமவேதீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோம பூஜை நடைப்பெற்றது.
    லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தில் அமைந்துள்ள லோகநாயகி சமேத ஸ்ரீசாமவேதீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு ஹோம பூஜை நடைப்பெற்றது. முன்னதாக மூலவர் சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கோவில் உள் பிரகாரத்தில் அமைக்கப்பட்ட ஹோம குண்டங்களில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க பசுபதாஸ்திர ஜெப ஹோமம் நடத்தினர். காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் நடைபெற்ற இந்த சிறப்பு ஹோமம் நிகழ்வில் 3 லட்சம் எண்ணிக்கை ஜெபங்கள் ஜெபித்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 சிவாச்சாரியர்கள் சிறப்பு ஹோமத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து 1 மணிக்கு பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஹோமங்கள் முடிவடைந்தது. தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

    Next Story
    ×