search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

    திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் அறிவுறுத்தலின்படி சாதாரணப் பக்தர்களுக்கு விரைந்து சாமி தரிசனம் வழங்க எல்-1 மற்றும் எல்-2 தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இருக்க பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கும், பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 14 மாதமாக கொரோனா பிடியில் இருந்து உலக மக்களை காப்பாற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு ஆன்மிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அவற்றில் சில ஆன்மிக நடவடிக்கைகள் இன்று வரை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் தொடர்கின்றன. ஏழுமலையானின் அருளாசியோடு உலக மக்கள் அனைவரும் விரைவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வார்கள்.

    திருமலையில் உள்ள வராகசாமி கோவில் மகா துவாரம் மற்றும் கோவில் உள்ளே வெள்ளித்தகடுகள் பதிக்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 45 நாட்களாக மூலவருக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்து, அதில் இருந்து கிடைக்கப்பட்ட தானியங்களில் பிரசாதம் தயார் செய்யப்பட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நடைமுறையை நிரந்தரமாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்தத் திட்டத்துக்காக நாங்கள் இரு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய உள்ளோம். அந்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்படும்.

    திருப்பதியில் போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டியின் வேண்டுகோளை ஏற்று மாநில அரசு, தேவஸ்தான நிதியில் அலிபிரியில் இருந்து கபிலத்தீர்த்தம் சாலை வரை கருடா மேம்பாலம் கட்டும் பணி நடந்தது.

    அந்த மேம்பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த மேம்பாலத்தைக் கட்ட விரைவில் புதிய டெண்டர் விடப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏழுமலையான் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×