search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு புஷ்யமண்டப காவிரி ஆற்றில் சிவாச்சாரியார்கள் பால் ஊற்றி வழிபாடு
    X
    திருவையாறு புஷ்யமண்டப காவிரி ஆற்றில் சிவாச்சாரியார்கள் பால் ஊற்றி வழிபாடு

    திருவையாறு புஷ்யமண்டப காவிரி ஆற்றில் சிவாச்சாரியார்கள் பால் ஊற்றி வழிபாடு

    திருவையாறு புஷ்யமண்ட படித்துறையில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி தண்ணீரில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட்டார். தொடர்ந்து கல்லணையில் கடந்த 16-ந்தேதி தேதி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறு புஷ்யமண்டப காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.

    அப்போது திருவையாறு புஷ்யமண்ட படித்துறையில் சிவாச்சாரியார்கள், பொதுமக்கள், பக்தர்கள் காவிரி தண்ணீரில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி மகிழ்ச்சியடைந்தனர். காவிரியில் தண்ணீர் வந்ததால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×