search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி
    X
    வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி

    வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

    வைகாசி விசாகத்தையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, அர்ச்சனைகளுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் கோவில் பூசாரி மற்றும் ஒரு சிலர் மட்டும் உடனிருந்தனர்.
    வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை சிறுமலை அடிவாரத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்த கோம்பை கரட்டில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊடங்கினால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது. அதனால் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, அர்ச்சனைகளுடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் கோவில் பூசாரி மற்றும் ஒரு சிலர் மட்டும் உடனிருந்தனர். கோவில் பூட்டப்பட்டிருந்ததால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    வைகாசி விசாகத்தையொட்டி மதுரை ஆலங்குளம் கற்பக விநாயகர் கோவிலில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் சோலைமலை முருகன் கோவிலிலும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது.

    Next Story
    ×