search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்துவரப்பட்டது.
    X
    அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்துவரப்பட்டது.

    அவினாசி அருகே கன்னிமார்கோவில் கும்பாபிஷேகம் 26-ந் தேதி நடக்கிறது

    அவினாசி அருகே கன்னிமார்கோவிலில் விமான அபிஷேகம், 7.25 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாட்டை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
    அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியில் ராஜா நகர் கமிட்டியார் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பன், வேடன், பேச்சியம்மன், மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, குதிரை வாகனம் ஆகிய தெய்வங்களுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 26-ந் தேதி காலை 6.25 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்துவரப்பட்டது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அங்குரார்ப்பணம், முதற்கால யாக பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு விநாயகர், கருப்பராயன், கன்னிமார், மகாவிஷ்ணு சன்னதியில் கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தல் நடைபெறுகிறது. 26-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை ஆகியன நடைபெற உள்ளது. காலை 6.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, 7 மணிக்கு விமான அபிஷேகமும் நடக்கிறது.

    தொடர்ந்து காலை 7 மணிக்கு விமான அபிஷேகம், 7.25 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 8 மணி முதல் 9 மணி வரை மகா அபிஷேகம், கோமாதா பூஜை, தச தரிசனம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக ஏற்பாட்டை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னின்று கவனித்து வருகின்றனர்.
    Next Story
    ×