என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விடாலமுத்து அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா 24-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்21 April 2021 12:34 PM IST (Updated: 21 April 2021 12:34 PM IST)
கொத்தனார்விளை விடாலமுத்து அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா 24-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
மண்டைக்காடு அருகே கீழ்கரை கொத்தனார்விளையில் விடாலமுத்து அர்த்தநாரீஸ்வரர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 26-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதற்கான விழா 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து கோ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. 9 மணிக்கு லட்சுமி குபேர பூஜை, சுதர்சன ேஹாமம், நவகிரக ஹோமம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு நதிக்கு சென்று புனிதநீர் எடுத்து வரப்படுகிறது. பூமி பூஜை வாஸ்துஹோமம், கும்ப அலங்காரம், முதலாம் கால யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், விமான கலச பிரதிஷ்டை, மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊர் அழைப்பு, மஞ்சள் பால் ஊர்வலம், சுமங்கலி பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, சாமிக்கு காப்பு கட்டுதல், ஹோமங்கள், தீபாராதனை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீடத்தை சேர்ந்த சுவாமி சிவாத்மானந்த மகராஜ் தலைமையில் விடாலமுத்து அர்த்தநாரீஸ்வரர், பத்ரகாளியம்மன் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை டாக்டர் சுந்தரேசஷம்மா நடத்துகிறார். இதைத்தொடர்ந்து சாமி, அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, நெட்டாங்கோடு சாரதேஸ்வரி ஆஸ்ரமம் யோகேஸ்வரி வித்யாபுரி மாதாஜி நடத்துகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி, ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story
×