search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குத்தாலம் அருகே மல்லியத்தில் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
    X
    குத்தாலம் அருகே மல்லியத்தில் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

    குத்தாலம் அருகே மல்லியத்தில் மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

    குத்தாலம் அருகே மல்லியத்தில் மகாமாரியம்மன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.
    மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் பழமை வாய்ந்த மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, குடமுழுக்கு விழா கடந்த 16-ந் தேதி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.

    நேற்று முன்தினம் 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல் மல்லியம் கிராமத்தில் பிடாரி மற்றும் அய்யனார் கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடந்தது.
    Next Story
    ×