search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சவுமிய நாராயண பெருமாள் கோவிலில்கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது
    X
    சவுமிய நாராயண பெருமாள் கோவிலில்கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது

    சவுமிய நாராயண பெருமாள் கோவிலில்கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாக்களில் சாமி புறப்பாடு நடைபெறும் போது சுவாமியை பின் தொடர பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த நேற்று முன்தினம் மாலை மிருத்ஸங்கரஹணம், சேனை முதல்வர் புறப்பாடு நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று காலை பெருமாள் ஸ்ரீதேவியருடன் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளினார்.பின்னர் கொடிமரத்திற்கு பால், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதை தொடர்ந்து இரவில் காப்புக்கட்டுதலுடன் முதல் நாள் உற்சவம் நடைபெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை தினசரி காலை, இரவில் சாமி பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடு நடைபெறுகிறது.

    22-ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும், 25-ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் சாமி புறப்பாடு, 26-ந்தேதி தேர்த்திருவிழாவுக்கு பதிலாக தங்க பல்லக்கில் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும், 28-ந்தேதி புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    கொரோனா பரவல் காரணமாக இந்த விழாக்களில் சாமி புறப்பாடு நடைபெறும் போது சுவாமியை பின் தொடர பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள், ரத்த அழுத்த நீரிழிவு நோய் உள்ளிட்ட நபர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×