search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள் - சந்தான கோபாலகிருஷ்ணன்
    X
    ஆண்டாள் - சந்தான கோபாலகிருஷ்ணன்

    கொரோனா 2-வது அலை:ஆண்டாள் - சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் சித்திரை திருவிழா ரத்து

    தற்பொழுது கொரோனா 2-வது அலையால் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திற்குள் திருவிழாவாக நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் மிகவும் பழமையான ஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் அழகன்குளம் மெயின் சாலையில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு சித்ரா பவுர்ணமி உற்சவம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி மேலும் சிறப்பான அலங்காரங்கள் செய்து பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து குதிரை வாகனத்தில் மேளதாளத்துடன் அழகன்குளம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் பெருங்குளம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் கருட வாகனத்தில் திருவீதிஉலா வரும் நிகழ்வும் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது வழக்கம். தற்பொழுது கொரோனா 2-வது அலையால் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே கோவில் வளாகத்திற்குள் திருவிழாவாக நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

    மேலும் தமிழக அரசின் உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் தனிமனித இடைவெளிவிட்டு பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கோவிலுக்குள் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாக அறங்காவலர் சார்பில் வக்கீல் அசோகன் குடும்பத்தினர் சார்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×