
இதையொட்டி சத்திய நாராயண பூஜையும், லட்சுமி ஹயக்ரீவருக்கு கலச அபிஷேகத்துடன் கிருஷ்ணகமல பூ அலங்காரமும், சோடச உபசாரத்துடன் மகா தீபாராதனையும் நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதில் சக்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.