
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை உற்சவர் பொன்னப்பன் பூமிதேவி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனைக்கு பின்னர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.