search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவில் தெப்ப உற்சவம்
    X
    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவில் தெப்ப உற்சவம்

    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவில் தெப்ப உற்சவம்

    அரியாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோடு பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி மயானக்கொள்ளைக்கு சென்றது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் மயானக்கொள்ளை நடந்தது.

    விழாவில் நேற்று காலை 8 மணியளவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

    Next Story
    ×