search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா
    X
    சாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா

    சாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா

    சாயல்குடி அருகே காவாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலை மாடன், வண்ணாரமாடன், பேச்சியம்மன், முப்பந்தல் இசக்கியம்மன், மயான காளியம்மன், பாண்டிமுனி, பிரம்ம சக்தி மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    காவாகுளம் ஊர்த்தலைவர் ராமர் நாடார் தலைமை தாங்கினார். கடலாடி வட்டாட்சியர் சேகர், கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியசாமி, வீரபத்திரன், தங்கையா, முன்னாள் நிர்வாகிகள் சீனிவாசன், சவுந்திர பாண்டியன், ராஜ், மாடசாமி, கூட்டுறவு சங்க தலைவர் தீப்பாச்சி, டிரைவர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜை, யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி நடைபெற்றது.

    நேற்று மணிகண்ட சிவாச்சாரியார் லட்சுமி நாராயண போற்றி ஆகியோர்களால் சுடலைமாடன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கடம் புறப்பாடு செய்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அன்னதானம் நடைபெற்றது. கோவிலுக்கு இலவசமாக நிலம் வழங்கிய காமராஜ், ராஜம்மாள் பெரியசாமி, காமராஜ் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முருகன் கோடாங்கி, சவுந்திரபாண்டியன், சரஸ்வதி, திலீப், சக்தி, சின்னத்துரை, உமாமகேஸ்வரி, வேல்முருகன், ரமேஷ் மற்றும் ஆலய திருப்பணி குழு நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×