search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்தபோது எடுத்தபடம்.
    X
    பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்தபோது எடுத்தபடம்.

    திருமலையில் புரசைவாரி தோட்ட உற்சவம் ஜீயர்சுவாமிகள் பாராயணம் செய்தனர்

    வைணவ ஆச்சாரியார் அனந்தாழ்வார் அவதார உற்சவத்தையொட்டி திருமலையில் புரசைவாரி தோட்ட உற்சவம் நடந்தது. அதில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்று நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்களை பாராயணம் செய்தனர்.
    வைணவ ஆச்சாரியாரும், திருமாலின் தீவிர பக்தருமான ராமானுஜரின் சீடராக அனந்தாழ்வார் இருந்தார். ஸ்ரீரங்கத்தில் வைணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ராமானுஜர் தனது சீடர்களிடம், திருமலைக்குச் ெசன்று வெங்கடாஜலபதிக்கு கைங்கர்யம் செய்ய யாரேனும் இருக்கிறீர்களா? எனக் ேகட்டார். அதற்கு அனந்தாழ்வார், நான் இருக்கிறேன் எனப் பதில் அளித்தார்.

    ராமானுஜரிடம் உத்தரவுப்பெற்று ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு திருமலைக்கு வந்த அனந்தாழ்வார் காடு, மலைகளை திருத்தி பூங்கா, ஏரி அமைத்து பூச்செடிகளை வளர்த்து, திருவேங்கடநாதனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ததாக வரலாறு கூறுகிறது. அனந்தாழ்வார் தனது வாழ்நாளில் 102 ஆண்டுகள் வேடங்கடவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தார். வெங்கடாஜலபதியின் திருவடியில் இணைந்த அவர், திருமலை நந்தவனத்தில் மகிழ மரமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

    அனந்தாழ்வாரை போற்றும் விதமாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய அவதார தினம், நினைவுநாளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அனந்தாழ்வாரின் 967-வது அவதாரத் தினம் ேநற்று முன்தினம் திருமலையில் உள்ள அனந்தாழ்வார் தோட்டத்தில் புரசைவாரி தோட்ட உற்சவத்தை நடத்தினர். அங்குள்ள மகிழ மரத்துக்கு சிறப்புப்பூஜை செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர். அதில் வேதப்பண்டிதர்கள், அர்ச்சகர்கள் என 300-க்கும் மேற்பட்டோர்  பெரிய ஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் தலைமையில் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடல்களை பாராயணம் செய்தனர்.
    Next Story
    ×