search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
    X
    தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

    ஒட்டன்சத்திரம் அருகே, மகாலட்சுமி அம்மன் கோவிலில் ததலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தலையில் பரம்பரை பூசாரி பூச்சி அப்பன் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை அடுத்த வலையபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவிலில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியையொட்டி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி நேற்று தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 25 பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பக்தர்கள் தலையில் பரம்பரை பூசாரி பூச்சி அப்பன் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×