
தென்பெண்ணையாற்று கரையோரமாக வரும் இந்த சன்னியாசிகள் சுமார் 320 இடங்களில் பூஜையை நடத்தி விட்டு, ஆறு கடலில் கலக்கும் இடமான கடலூருக்கு நேற்று மாலை வந்தடைந்தனர். இக்குழுவினருக்கு சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசிய செயலாளர் சிவராமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள குமந்தான்மேடு தரைப்பாலத்தில் புதுச்சேரி சுவாமி ஓங்காரனந்தா தலைமையில் மலர்கள் தூவி, ஆரத்தி வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் சன்னியாசிகள் ஆற்றுக்கு தீபாராதனை எடுத்தனர். அதன் பிறகு கலசத்தில் கொண்டு வரப்பட்ட புனித நீர், தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் தாழங்குடாவில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.