
அதைத் தொடர்ந்து 6 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் கலச புறப்பாடும், 6.30 மணிக்கு விமானம், ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும், 7 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனையும், மாலை 4 மணி அளவில் மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.
விழாவில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கோவில் பரம்பரை அறங்காவலர்கள் வி.துரைசாமி, வி.டி.என்.மார்க்கபந்து, வி.சத்தியநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவில் குருக்கள் பாபு, உமாபதி, சந்திரசேகர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் கணேஷ் பாத்திரக் கடை உரிமையளர்கள் எஸ்.ஆர்.எம். ராஜா, விஜயகுமார், மகேஷ், சீனிவாசன் மற்றும் கார்த்திக், பாலாஜி உள்பட வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.