
வருகிற 23-ந் தேதி மறு பூச்சாட்டுதலும், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி மகா குண்டம் எனப்படும் தீ மிதித்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அன்று பொங்கல் விழாவும், மார்ச் 4-ந் தேதி அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 6-ந்் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி அம்மன் ஊஞ்சல் விழாவும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்த திருவிழாவை முன்னிட்டு குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக மஞ்சள் ஆடை அணிந்து இரு வாரங்கள் விரதமிருந்து மகா குண்டம் என்னும் தீ மிதித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.